Merchant Support-Tamil


English

हिन्दी

ಕನ್ನಡ
తెలుగు
ലയാളം
ગુજરાતી
मराठी
বাঙালি

வியாபரிகளுக்கான உதவி

பேஅவுட்ஸ் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள்

வங்கிக்கு என்னுடைய பேமெண்ட் எப்போது மாற்றப்படும்?

பரிவர்த்தனை நடைபெற்ற அடுத்த நாளில் இருந்து உங்களுடைய வங்கிக்கு தொகையானது மாற்றப்படும். உதாரணதிற்கு, இன்று மாலை நீங்கள் பரிமாற்றம் மேற்கொண்டுள்ளீர்கள் எனில் அது அடுத்த நாளின் முடிவில் பரிமாற்றம் செய்யப்படும்.

அடுத்த நாளில் என்னுடைய தொகையை நான் பெறவில்லை எனில் செய்ய வேண்டியது என்ன?

அடுத்த நாளில் உங்களுடைய தொகையை நீங்கள் பெறவில்லை எனில் அடுத்த 72 மணி நேரத்திற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த 3 நாட்களுக்கு பண பரிமாற்றம் நடைபெறுவதற்கான முயற்சி தானாகவே நடைபெறும். ஒருவேளை இது தொடர்ந்து நடைபெறவில்லை எனில் நீங்கள் எங்களுடைய உதவி மைய எண்ணான 0120- 4440440 -க்கு வேண்டுகோள் விடுக்கவும்.

என்னுடைய பேமெண்ட்ஸ்/வங்கி பரிவர்த்தனையை நான் ட்ராக் செய்வது எப்படி?

பிஸினஸ் வித் பேடிஎம் ஆப் பில்  உங்களுடைய பேமெண்ட்ஸ்/வங்கி பரிவர்த்தனையை ட்ராக்கிங் செய்வதற்காக பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்கவும்:

செலுத்திய பேமெண்ட்களுக்காக:

  • பேடிஎம் பிஸினஸ் ஆப்பை திறக்கவும், >> பேமெண்ட்>> என்பதை க்ளிக் செய்து வலது மேல் மூலையில் குறிப்பிடப்பட்டுள்ள காலெண்டரில் விரும்பிய தேதியை தேர்வு செய்யவும்.
  • பெறுபவர்களுடைய எண் மற்றும் தேதியுடன் எல்லா செலுத்திய பேமெண்ட்களும் காண்பிக்கப்படும், ஸ்டேட்மெண்ட்டை உங்களால் டவுன்லோடு செய்து கொள்ளவும் முடியும்.

செட்டில்டு/ வங்கி பரிவர்த்தனைகளுக்காக

  • பேடிஎம் பிஸினஸ் ஆப்பை திறக்கவும், >>வங்கி பரிவர்த்தனைகள்>> என்பதை க்ளிக் செய்து வலது மேல் மூலையில் குறிப்பிடப்பட்டுள்ள காலெண்டரில் விரும்பிய தேதியை தேர்வு செய்யவும்.
  • செட்டில்மெண்ட் செய்யபட்ட தேதி மற்றும் நேரத்துடன் எல்லா பெறப்பட்ட பேமெண்ட்களும் தேதிவாரியாக காண்பிக்கப்படும், ஸ்டேட்மெண்ட்டை உங்களால் டவுன்லோடு செய்து கொள்ளவும் முடியும்.

என்னுடைய வங்கி பாஸ்புக்குடன் நான் ஓப்பீடு செய்தல் எப்படி?

உங்களுடைய கணக்கில் நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு யுடிஆர் எண் உள்ளது. பரிவர்த்தனைக்கான யுடிஆர் எண்ணை நாங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்புகிறோம் நீங்கள் அதனை பரிசோதிக்கு கொள்ள முடியும் அல்லது பேடிஎம் ஃபார் பிஸினஸ் ஆப்பில் (டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்) பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடித்தும் பரிசோதித்து கொள்ளலாம்.

வங்கி செட்டில்மெண்ட்களுக்காக:

  1. வங்கி பரிவர்த்தனைக்கு சென்று பிஸினஸ் ஆப்பை க்ளிக் செய்யவும்
  2. வலது மேல் மூலையில் கொடுக்கப்பட்டுள்ள காலெண்டரில் நீங்கள் சரிபார்க்க விரும்பும் பரிமாற்றத்திற்கான தேதியை தேர்வுசெய்யவும்.
  3. உங்கள் கணக்கில் செட்டில் செய்யப்பட்ட தனிப்பட்ட பரிமாற்றங்களுடன் மொத்த தொகையானது மேலே காண்பிக்கப்படும்.
  4. யுடிஆர் எண்ணை கண்டறிய ஏதேனும் ஒரு பரிமாற்றத்தை க்ளிக் செய்யவும்

பரிமாற்றத்தின் அதே யுடிஆர் எண் உங்களுடைய வங்கி பாஸ்புக்/ஸ்டேட்மெண்ட்டில் இருக்கும். இதனை பயன்படுத்தி நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.

ஆப் லாகின் சேவைகள்

பேடிஎம் ஃபார் பிஸினஸ் ஆப்பில் என்னால் லாகின் செய்ய முடியவில்லை, நான் என்ன செய்ய வேண்டும்?

தயவுசெய்து உங்கள் பேடிஎம் ஆப்பில் நீங்கள் பயன்படுத்திய அதே பேடிஎம் சான்றுகளை பயன்படுத்தி லாகின் செய்யவும். பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிட்டீர்கள் எனில் ஃபர்காட் பாஸ்வேர்டு என்பதை க்ளிக் செய்து உங்களுடைய பாஸ்வேர்டை ரிசெட் செய்து முயற்சிக்கவும்.

என்னுடைய பாஸ்வேர்டை ரிசெட் செய்வது எப்படி?

ஃபர்காட் பாஸ்வேர்டு என்பதை க்ளிக் செய்து உங்களுடைய பாஸ்வேர்டை ரிசெட் செய்ய முடியவில்லை எனில் பாஸ்வேர்டை ரிசெட் செய்வதில் வேறு பிரச்சனை உள்ளது. ஆகவே கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கவும்.

  1. உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து (0120- 4440440) என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
  2. ப்ரொஃபைல்/லாகின் என்பதை தேர்வு செய்யவும்
  3. உங்களுடைய பாஸ்வேர்டை ரிசெட் செய்ய எண் 1-ஐ அழுத்தவும் மற்றும் இதனுடைய செயல்பாடு நிறைவடையும் வரை ஐவிஆர்-காக காத்திருக்கவும் அதன் பின் மீண்டும் எண் 1-ஐ அழுத்தவும்.
  4. உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ் எம் எஸ் வழியாக பரிசோதனை லிங்க் அனுப்பப்படும்.
  5. லிங்க்கை க்ளிக் செய்த பின்னர் ‘க்ரீயேட் நியூ பேடிஎம் பாஸ்வேர்டு’ என்ற வெப் பக்கத்திற்கு இது நேரடியாக உங்களை கொண்டுசெல்லும்.
  6. நியூ பாஸ்வேர்டை பதிவுசெய்யவும் மற்றும் அப்டேட் என்பதை க்ளிக் செய்யவும்

உங்களுடைய பாஸ்வேர்டு அப்டேட் செய்யப்பட்டது.

வரம்புகள் மற்றும் கட்டணங்கள்

வேலட்டில் பேமெண்ட்ஸ் ஏற்பது

வேலட்டில் பேமெண்ட்களை ஏற்பது

பேடிஎம் ப்ரைம்/கேஒய்சி வேலட் வாடிக்கையாளராக இருப்பின், மாதத்திற்கு 1 லட்சம் வரை நீங்கள் ஏற்க முடியும். பெனிஃபிஷியரை சேர்க்காமலே பேங்க்/வேலட்டில் ரூ10000 வரை உங்களால் பரிமாற்றம் செய்ய முடியும். பெனிஃபிஷியரை சேர்த்தப்பின் ரூ 25000 வரை அனுப்ப இயலும்.

பெனிஃபிஷியரை சேர்ப்பது எப்படி?

உங்களுடைய பேடிஎம் ஆப்பின் வலது மேல் மூலையில் உள்ள ப்ரொஃபைல் என்ற ஐகானை க்ளிக் செய்யவும், மேனேஜ் பெனிஃபிஷியரிஸ் என்பதை தேர்வு செய்யவும் பின்னர் பணப் பரிமாற்றத்திற்காக நியூ பெனிஃபிஷியரை உங்களால் சேர்க்க முடியும்.

கவனிக்கவும்:  ஆப்பில் உங்களால் ‘ஆட் பெனிஃபிஷியரை’ பார்க்க முடியவில்லை எனில் தயவுசெய்து உங்களுடைய பேடிஎம் அக்கவுண்டை லாக் அவுட் செய்து பின்னர் லாகின் செய்யவும்.

Paytm Minimum KYC  வாடிகையாளராக,  உங்க வேலட்டில் ரூ 10000 வரை ஏற்க அல்லது சேர்க்க உங்களால் முடியும்.  எங்களுடைய ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மெர்ச்செண்ட்ஸ் அல்லது ஷாப் அல்லது பேடிஎம்மில் ரீஜார்ஜ் என உங்களால் பரிவர்த்தனைகள்/செலுத்துதல் செய்ய முடியும். Paytm Basic Wallet (a non KYC user) வாடிக்கையாளராக,  உங்களுடைய வேலட்டில் பணத்தை பெற அல்லது சேர்க்க உங்களால் இயலாது. ஒருவேளை உங்கள் வேலட்டில் பணம் ஏதேனும் இருக்கிறது எனில் அதனை  எங்களுடைய ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மெர்ச்செண்ட்ஸ் அல்லது ஷாப் அல்லது பேடிஎம்மில் ரீஜார்ஜ் என உங்களால் பரிவர்த்தனைகள்/செலுத்துதலுக்கு பயன்படுத்த முடியும்.  இதுபோன்ற இருப்புகளுக்கு வேலிட்டியானது 5 வருடங்கள் இந்த பணத்தை ஏதேனும் பிற வாடிக்கையாளர் அல்லது ஒரு வங்கிக்கு உங்களால் மாற்ற இயலாது. 

உங்களுடைய வேலட் லிமிட்டை அப்கிரேடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் –   http://m.p-y.tm/KYC style=”color:#48baf5″

Send a message

 மற்றும் உங்கள் பேடிஎம் ஆப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்ததில் உள்ளது போலவே சரியான ஆவண அடையாளம் மற்றும் பெயரை பதிவுசெய்யவும்.

வங்கி க்யூஆர் கோடில் பேமெண்ட்களை ஏற்பது.

 

பேடிஎம் மூலம், பேமெண்ட்களை நேரடியாக உங்கள் வங்கியில் பெறுங்கள். QR கோட் மூலம் பெறப்படும் பேமெண்ட்கள் அடுத்த நாளின் இறுதியில் தானாகவே,  இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உங்கள் அக்கவுண்டிற்கு ஆகும் கட்டணம் பற்றிய விவரங்களுக்கு உங்களின் பிஸினஸ் வித் பேடிஎம் ஆப்பில் உள்ள ‘லிமிட்’ செக்‌ஷன் அல்லது மெர்ச்சண்ட் பேனலப் பார்க்கவும்

பேமெண்ட்களை ஏற்பது

வாடிக்கையாளர்களிடம் இருந்து நான் பெறபட்ட பேமெண்ட்ஸை ட்ராக் செய்வது எப்படி?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை கடைப்பிடித்து பேமெண்ட்களை நீங்கள் ட்ராக் செய்ய முடியும்

  1. பேடிஎம் ஃபார் பிஸினஸ் ஆப்பை திறக்கவும்
  2. உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட பேடிஎம் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டுடன் லாகின் செய்யவும்
  3. எப்போதும் போலவே பெறப்பட்ட லேட்டஸ்ட் பேமெண்ட்களை நீங்க ஹோம் ஸ்கிரீனில் பார்ப்பீர்கள்
  4. ஸ்கிரீனின் மேல் பக்கத்தில் இருக்கக்கூடிய ரெஃப்ரஷ் என்பதை க்ளிக் செய்யவும், இப்போது இந்த லிஸ்ட்டின் மேல் பக்கத்தில் சமீபத்திய பேமெண்ட்களை நீங்கள் பார்ப்பீர்கள்.
  5. பேமெண்ட் என்பதை க்ளிக் செய்யவும், இது அடுத்த ஸ்கிரீனுக்கு உங்களை கொண்டு செல்லும் அதில் உள்ள கிரீன் டிக் மார்க், வாடிக்கையாளர் மொபைலின் முதல் இரண்டு மற்றும் கடைசி நான்கு இலக்கங்களுடன் பெறப்பட்ட பேமெண்ட்டை உறுதி செய்யும்.
  6. பெறப்பட்ட லேட்டஸ்ட் பேமெண்ட்களின் கீழ் சமீபத்திய 3 பேமெண்ட்களை உங்களால் பார்க்க முடியும், ஷோ மோரில் க்ளிக் செய்து 10 பேமெண்ட்கள் வரை பார்க்கலாம்

ஆப்பை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லை நான் பேமெண்ட்களை ட்ராக் செய்வது எப்படி?

உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை எனில் 7053112112 என்ற எண்ணுக்கு உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட பேடிஎம் எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுக்கவும். எங்களிடம் இருந்து பின்வரும் தகவலை நீங்க்ள் எஸ்எம்எஸ் மூலம் பெறுவீர்கள்

  1. இந்த நேரம் வரை நாளின் சேகரிக்கப்பட்ட தொகை(உதாரணத்திற்கு நீங்கள் மாலை 4 மணிக்கு மிஸ்டு கால் கொடுக்கிறீர்கள் எனில் 4 மணிவரை நாளின் சேகரிக்கப்பட்ட மொத்த பேமெண்ட் கொடுக்கப்படும்)
  2. கடைசி மூன்று பரிவர்த்தனைகளின் விவரங்கள்

நாளில் பெறப்பட்ட பேமெண்ட்களை நான் பார்க்க விரும்புகிறேன், நான் செய்ய வேண்டியது என்ன?

நாளில் பெறப்பட்ட பேமெண்ட்களை பார்ப்பதற்கு, கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைப்பிடித்து பேடிஎம் ஃபார் பிஸினஸ் ஆப்பில் உங்களால் பார்க்க முடியும்.

  1. பேடிஎம் ஃபார் பிஸினஸ் ஆப்பை திறக்கவும்
  2. உங்களுடைய விவரங்களுடன் லாகின் செய்யவும்
  3. ஆப் ஸ்கிரீனின் கீழ் உள்ள பேமெண்ட்ஸ் என்பதை க்ளிக் செய்யவும்
  4. ஸ்கிரீனின் வலது மேல்பக்கத்தில், டைம் ஃப்ரேமை-ஐ தேர்வு செய்ய ட்ராப் டவுன் உள்ளது, அதனை க்ளிக் செய்து இன்றைக்கான தேதியை தேர்வு செய்யவும்
  5. நாளிற்காக பெறப்பட்ட உங்களுடைய மொத்த பேமெண்ட்களுடன் தனிப்பட்ட பேமெண்ட் விவரங்கள் இங்கே காண்பிக்கப்படும். ஒருவேளை உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை எனில் 7053112112 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும், இதற்கான எஸ்எம்எஸை நீங்கள் பெறுவீர்கள்.

பேடிஎம்மின் பதிவுசெய்யப்பட்ட வியாபாரியாக நான் மாறுவது எப்படி?

  1. பேடிஎம்மின் பதிவுசெய்யப்பட்ட வியாபாரியாக உருவாக இங்கே க்ளிக் செய்யவும், உங்களுடைய பேடிஎம் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டுடன் லாகின் செய்யவும்
  2. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள எல்லா விவரங்களையும் நிரப்பவும்.
  3. விண்ணப்பம் சமர்பிக்கப்பட்ட பின் ஒரு வியாபாரியாக பதிவுசெய்ய எங்களுடைய டீம் உங்களை தொடர்புக் கொள்வார்கள்.
  4. ரூ 50000 வியாபாரியாக, எங்களுடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கி கணக்கில் ரூ 50000 வரை 0%  கட்டணத்தில் நேரடியாக உங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்,
  5.  

பெறப்பட்ட ஏதேனும் பேமெண்ட்டின் ஆர்டர் ஐடியை நான் கண்டறிவது எப்படி?
உங்களுடைய கணக்கில் பெறப்பட்ட ஒவ்வொரு பெமெண்ட்டிற்கும் நாங்கள் அனுப்பிய எஸ்எம்எஸ்-இல் ஆர்டர் ஐடி இருக்கும். மேலும் பேடிஎம் ஃபார் பிஸினஸ் ஆப்பில் ஆர்டர் ஐடியை நீங்கள் பரிசோதித்து கொள்ளவும் முடியும். (டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்)(டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்)

  1. பேமெண்ட்ஸ்-க்கு சென்று பிஸினஸ் ஆப்பை க்ளிக் செய்யவும்
  2. வலது மேல் மூலையில் கொடுக்கப்பட்டுள்ள காலெண்டரில் நீங்கள் விரும்பும் ஆர்டர் ஐடி-க்கான பேமெண்ட் தேதியை தேர்வுசெய்யவும்
  3. உங்கள் கணக்கில் செட்டில் செய்யப்பட்ட தனிப்பட்ட பரிமாற்றங்களுடன் மொத்த தொகையானது மேலே காண்பிக்கப்படும்.
  4. ஆர்டர் ஐடியை பார்க்க ஏதேனும் ஒரு பரிமாற்றத்தை க்ளிக் செய்யவும்

ஃபேர்/அன்ஃபேர் யூசேஜ் பாலிசீஸ்

பேடிஎம் மெர்ச்சண்ட் அக்கவுண்டின் ஃபேர் யூசேஜ் என்பதன் அர்த்தம் என்ன?

  • பேடிஎம் பிஸினஸ் அக்கவுண்டின் கீழ் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ள சரக்கு மட்டும் சேவைகளுக்கு மட்டும் பேமெண்ட்களை பெறுவது.

பேடிஎம் சேவைகளின் அன்ஃபேர் யூசேஜுக்கான உதாரணம் என்ன?

  • வாடிக்கையாளர் அல்லாத/மெர்ச்சண்ட் பிஹேவியருக்காக பேடிஎம் மெர்ச்சண்ட் QR பயன்படுத்துதல்.
  • வாடிக்கையாளரின் பேங்க் அக்கவுண்டில் கேஷ் பெனிஃபிட்ஸ்/பணம் வழங்கியதற்காக அவர்களிடம் இருந்து பேமெண்ட் பெறுவது.

இந்தப் பயிற்சிகள் பேடிஎம் வழங்கும் மெர்ச்சண்டிற்கான சலுகைகளில் இருந்து விலக்கு/தடைகள் அளிக்கலாம்.
அன்ஃபேர் பேடிஎம் யூசேஜினால் வேல்லட் பே மோட் டீஆக்டிவேட் செய்யப்பட்டு, பிறகு மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படுமா?
வேல்லட் பே மோட் அன்ஃபேர் யூசேஜ் காரணத்தால் டீஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் பேடிஎம் வேல்லட் மூலம் பெற்ற பேமெண்டில் 1.99%+GST செலுத்த சம்மதித்தால் மட்டுமே மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும்.
கட்டணம் இல்லாமல் பேமெண்ட்களைப் பெறுவது எப்படி?
கட்டணம் இல்லாமல் பேமெண்ட்களைப் பெற நீங்கள் UPI/PPBL நெட்பேங்கிங் போன்றவைகளை பயன்படுத்தலாம்.

பல்வேறு பிரச்சனைகளுக்கான கேள்விகளுக்கு எங்களிடம் இருந்து தீர்வு பெற தயவுசெய்து கீழே உள்ள எங்களுடைய உதவிமைய எண்ணை தொடர்புக் கொள்ளவும்.

மெர்ச்சண்ட் ஹெல்ப்டெஸ்க்

0120-4440-440

வங்கி, வேல்லட் மற்றும் பேமெண்ட்ஸ்

0120-4456456

மூவிஸ் மற்றும் ஈவண்ட்ஸ் டிக்கெட்ஸ்

0120-4728728

பேடிஎம் மால் ஷாப்பிங் ஆர்டர்ஸ்

0120-4606060

பேடிஎம் ட்ராவல் டிக்கெட்ஸ் மற்றும் ஃபோரெக்ஸ்

0120-4880880